Posts

Showing posts from March, 2022

உமையவள் பாமாலை | கண்தந்து காக்கும் கலைமகள் | பணிதங்கு நிலவுபோல் பாடல் (Panithangu Nilavupol)

                 கண்தந்து காக்கும் கலைமகள்                   ஓம் சக்தி  ஓம் சக்தி  ஓம் சக்தி  ஓம்                 ஓம் சக்தி  ஓம் சக்தி  ஓம் சக்தி  ஓம் பணிதங்கு நிலவுபோல் பால்போல் பளிங்குபோல்           பட்டொளி நிறைந்த வடிவும், படிகமணி மாலையும் ஏடும் திரித்து யாழ்           பயின்றருளும் நான்குகரலும், புனிதங்கள் யாவும் பொருந்தவெண் தாமரைப்           பூமேல் விளங்குபதமும், பொழுதெலாம் எண்ணும் என் பழுதெலாம் போக்கிநற்          புலமைத்தாரா வேண்டும் அம்மா ! கனி தந்து, மலர்தந்து, கவிதந்து தொழுவோர்க்குக்           கண்தந்து   காக்கும் அரசே ! கலைஞான மகளென்ற நிலையான புகழ்கொண்ட           கருணைமய மானபொருளே ! இனிதங்கு தடையின்றி யான்பாட ந...

உமையவள் பாமாலை | அடிமுடி வருணனை | நோக்கும் திசைதோறும் பாடல் (Nookum Thesaithoorum)

                           அடிமுடி வருணனை                           ஓம் சக்தி  ஓம் சக்தி  ஓம் சக்தி  ஓம்                      ஓம் சக்தி  ஓம் சக்தி  ஓம் சக்தி  ஓம் நோக்கும்   திசைதோறும்   நூபுரத் தாள்களும்,          நூல்போல் ஒசிந்த இடையும், நொடிதோறும்  நொடிதோறும் புதிதான எழில்கொள்ளும்           நுவலரிய திருமேனியும், வார்க்குங் குமக்கச்சு மார்பும்,அம் மார்பினில்           வாடாத மலர்மாலையும், வயிரமொடு நவமணி வயங்குமங் கலநாணும்,          மணம்வீசும் இனியபொலிவும், காக்கும் கரங்களும், அங்குசம் பாசம்           கரும்புவில் மலர்கள் ஐந்தும், கனிவாயில் மூரலும், கருணைபொழி விழிகளும்,    ...

Umaiyaval Pamalai | உமையவள் பாமாலை | வரம் (Varam)

                                             வரம்  தேவாதி தேவிநின் தெய்வமாக் கருணையால்           தீராத நோய்கள் தீரும் செல்வமும் செல்வாக்கும் செருமுனையில் வெற்றியும்           சீர்நிலை பேறும் சேரும் பூவுலகில் நிலையான புகழ்பெருகும் அறிவில்ஒரு           புதிய ஒளிதான் பிறக்கும் பூண் ஆள் இடம் துணை புத்திரர் பசுக்கள் எனும்           பொலிவு வரும் உயிர் தழைக்கும் பாவங்கள் ஏழ்மைகள் பழவினைகள் எனும் இவைகள்           பனிபோல் அகன்றுநீங்கும் பத்தியொடு சொல்வார்க்குச் சித்திகள் கைகூடும்           பாரின் மிசை அமைதி ஓங்கும் யாவும் கடந்தபே ரின்பநிலை கிட்டும்என           இசைபாடி வாழ்த்து கின்றோம் இறைவினை ஆண்டருளும் இராஜராஜேஸ்வரி         ...

Umaiyaval Pamalai | உமையவள் பாமாலை | வாழ்த்து (Valthu)

                                        வாழ்த்து  பொலிகஇவ் வையகம் பொலிக நெடு வானகம்           போயொழிக துயரமெல்லாம் புதியசொல் புதியபொருள் புதிய சுவை புதியஇசை           புலரட்டும் உலகமெல்லாம் மலிகவளம் வளர்கநலம் வாழ்கவே நல்லறம்           மயக்கங்கள் யாவும்தீர்க! மங்கல மடைந்தையர் மனையறம் நனிதழைக           மடமைகள் வீழ்க! வீழ்க!! கலிகெடுக எங்கெங்கும் கருணை அரசோச்சுக           கயமைகள் நிலம்பு தைக! கலைமகள் விளக்கமாய் திருமகள் பெருக்கமாய்க்           காலங்கள் அமுதாகுக இலம்பா(டு) ஒன்றில்லாமல் யாவர்க்கும் யாவும்இனி           எய்தநீ ஆணைதருக இறைவிஎனை ஆண்டரும் இராஜராஜேஸ்வரி           இமயமலை வாழும் உமையே.          ...

உமையவள் பாமாலை | ஸ்ரீ சக்ர நாயகி | ஓமெனும் மந்திரத்து பாடல் (Oomendrum Manthirathu)

                                   ஸ்ரீ சக்ர நாயகி                 ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்                   ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் ஓமெனும் மந்திரத்துட் பொருள் ஆகின்ற           ஸ்ரீ இராஜ ராஜேஸ்வரி ஊழிதொறும் ஊழிதொறும் உயர் அறம் காக்கின்ற           ஸ்ரீ இராஜ ராஜேஸ்வரி நாமமும் உருவமும் பலவாகி உலகாளும்           ஸ்ரீ இராஜ ராஜேஸ்வரி ஞானமும் இச்சையும் கிரியையும் தானான           ஸ்ரீ இராஜ ராஜேஸ்வரி சேமமும் இன்பமும் சித்தியும் உதவிடும்           ஸ்ரீ இராஜ ராஜேஸ்வரி ஸ்ரீ சக்ர நிலையத்தில் சிவசக்தி வடிவான           ஸ்ரீ இராஜ ராஜேஸ்வரி யாமும்எம் கல்வியும் யாவும் உன் அடைக்கலம்    ...

உமையவள் பாமாலை | நீ தந்த குங்குமம் | நெற்றியில் நீ தந்த பாடல் (Nettriyil Nee Thantha)

                                   நீ தந்த குங்குமம்                       ஓம் சக்தி  ஓம் சக்தி  ஓம் சக்தி  ஓம்                    ஓம் சக்தி  ஓம் சக்தி  ஓம் சக்தி  ஓம் நெற்றியில் நீ தந்த குங்குமம் இருக்கையில்           நெஞ்சினில் மயக்க மில்லை நேரான சிந்தையோடு போராட வந்தபின்           நினைவினில் குழப்ப மில்லை முற்றுமுனை நம்பியே முறையோடு மேற்கொள்ளும்           முயற்சியில் தயக்க மில்லை மோகவயமாக உனைத் தாகமுடன் பாடிவரும்           முத்தமிழ் சலிப்பதில்லை உற்றபகை யாரெனிலும் உன் துணை கிடைத்தபின்           ஓய்வுற நினைப்பதில்லை உலகமோ ரேழுமே எதிராக நின்றாலும்       ...

உமையவள் பாமாலை | தவம் செய்யும் மலர் | என்னகவி பாடினால் பாடல் (Ennakavi Padinal)

                        தவம்  செய்யும் மலர்                 ஓம் சக்தி  ஓம் சக்தி  ஓம் சக்தி  ஓம்              ஓம் சக்தி  ஓம் சக்தி  ஓம் சக்தி  ஓம் என்னகவி பாடினால் உன் மனது மாறுமோ           என்மீதும் கருணை வருமோ எவர்மூலம் அணுகினால் யான் செய்யும் விண்ணப்பம்           எளிதாக நிறைவேறுமோ சொன்னபடி கேளாமல் துயர் செய்யும் என்மனம்           தூய்மைபெற வழியுமுண்டோ? சோதித்து வாட்டுவது போதுமென உன்னிடம்           சொல்லுபவர் யாருமிலையோ? சின்னமலர் என்றாலும் தேன்துளி சுமந்து தவம்           செய்துவரும் மலரல்லவோ? செப்புவது பிழைபடினும் செவியின்பம் தரவல்ல           சேய்மழலை மொழியல்லவோ? இன்னபடி தான் பெற்ற பிள்ளைதுயர் எய்துகையில் ...

உமையவள் பாமாலை | ஆத்ம சமர்ப்பணம் | காற்றைப் படைத்தவள் பாடல் (Kattrai Padaithaval)

                        ஆத்ம சமர்ப்பணம்  காற்றைப் படைத்தவள் நீயென்ற போதிலும்           கவரிகள் வீசுகின்றோம் கனலும்உன் வடிவெனிலும் கற்பூர தீபங்கள்           கமழ்தூபம் காட்டுகின்றோம் ஆற்றையும் கடலையும் அருளியநின் மேனிக்கும்           அபிடேக நீர்சு மந்தோம் அங்கிங் கெனாதுவெளி எங்குமுள நீ உறைய           ஆங்காங்கு கோயில் செய்தோம் போற்றரிய நின்வடிவைப் பொன்னிலும் கல்லிலும்           பூசித்து வாழ்த்துகின்றோம் புவிமீது நீ தந்த பொருளன்றி வேறொன்றைப்           போய்தேடி எங்கு பெறுவோம் ஏற்றருள வேண்டும் என இதயத்தை எம் அன்பை      இணைமலர்த் தாளில் வைத்தோம் இறைவிஎனை ஆண்டருளும் இராஜராஜேஸ்வரி      இமயமலை வாழும் உமையே                            ...

உமையவள் பாமாலை | நானில்லையா தேனில்லையா | துயிலெலும் வேளையில் பாடல் (Thuyilelum Velaiyil)

                    நானில்லையா ? தேனில்லையா ?            ஓம் சக்தி  ஓம் சக்தி  ஓம் சக்தி  ஓம்           ஓம் சக்தி  ஓம் சக்தி  ஓம் சக்தி  ஓம் துயிலெலும் வேளையில் சுவைநீர் அருந்துகையில்           துறைநீர் படிந்தெழுகையில் தொழுகையில் பலபணியும் புரிகையில் இன்பமொடு           துன்பங்கள் எதிர்வருகையில் வயிராற உண்ணுகையில் மாதரார் தோட்புறம்           மனமுருகி உயிர்தோய் கையில் மக்கள் மெய் தீண்டுகையில் மாறாத காதலொடு           வண்டமிழ்ச் சுவை ஆய்கையில் அயலெவரும் அறியாமல் அன்னையுனை வழிபடும்           ஆசைமகன் நானில்லையா ஆசைமகன் தருகின்ற வாசமலர் மாலைகள்           அத்தனையும் தேனில்லையா? இயலும்வரை பாடியும் எடுத்தளிக்காமல் நீ           இருப்ப...

உமையவள் பாமாலை | உணர்வரிய பிரமம் | மாரியாய் மேரியாய் பாடல் (Maariyaai Meriyaai)

                   உணர்வரிய பிரமம்                  ஓம் சக்தி  ஓம் சக்தி  ஓம் சக்தி  ஓம்                 ஓம் சக்தி  ஓம் சக்தி  ஓம் சக்தி  ஓம் மாரியாய் மேரியாய் முகமது நபிக்கருள           வந்த ஒரு மாசக்தியாய் மனவாக் கிறந்ததிருவருளாய் மதங்கள் தோறும்           வாழ்கின்ற தெய்வம் நீயே ஓரிடம் ஒருகுணம் ஒருநிலை ஒருருவம்           ஒருபெயர் ஒருவிகற்பம் ஒன்றுமில்லாத படி ஒவ்வொன்றும் தானாகி           உணர்வரிய பிரமம் நீயே ஆரியம் திராவிடம் ஆங்கிலம் சீனமென           அமைகின்ற மொழிகள் நீயே ஆமென்றும் இல்லையென அறுதியுடன் வாதித்தும்           அடைவரிய எல்லை நீயே யாரென்ன சொன்னாலும் யான் உன்னை ஒரு நாளும்           ஐயுற்ற தில்லை தாயே இறைவிஎனை ...

உமையவள் பாமாலை | ஆதரிப்பாய் அம்மா | ஆயிரம் இதழ்கொண்ட பாடல் (Aayiram Ethalkonda)

                         ஆதரிப்பாய் அம்மா   ஆயிரம் இதழ்கொண்ட தாமரை மலரிலே           அழகாக வீற்றிருப்பாய் அங்குசம் பாசம் கரும்பு வில் ஐங்கனை           அங்கையில் ஏற்றிருப்பாய் வேயின் குழல் முழவு வீணைநாத ஸ்வரம்           மேவுமிசை கேட்டிருப்பாய் விறலியர் நடம்புரிய வேறு வேறான கலை           விந்தைகள் நயந்திருப்பாய் ஞாயிறு முதற் பிரமன் நாராயணன் துதித்திடவும்           ஞாலமுழு தாண்டி ருப்பாய் நாடிவரும் அன்பர்க்குக் கோடிநலம் தந்துலகில்           நலிவின்றிக் காத்திருப்பாய் ஈயென இரந்துன்னை வேண்டவும் வேண்டுமோ           எனையும் நீ ஆதரிப்பாய் இறைவிஎனை ஆண்டருளும் இராஜராஜேஸ்வரி           இமயமலை வாழும் உமையே                   ...

உமையவள் பாமாலை | போற்றி! போற்றி! | மூவர்க்கும் தேவர்க்கும் பாடல் (Moovarkum Devarkum)

                         போற்றி! போற்றி!                ஓம் சக்தி  ஓம் சக்தி  ஓம் சக்தி  ஓம்              ஓம் சக்தி  ஓம் சக்தி  ஓம் சக்தி  ஓம் மூவர்க்கும் தேவர்க்கும் யாவர்க்கும் மேலான           முதல்வி, முக்கண்ணி போற்றி முறையாகத் தொழுவோர்க்குத் துணையாகி வழிகாட்டும்           முத்தமிழ்ச்செல்வி போற்றி நாவுக்கும் நெஞ்சுக்கும் நலம்தந்(து) இனிக்கின்ற           நாதாந்த சக்தி போற்றி நான் என்றும் எனதென்றும் நலியாத நிலைசேர்க்கும்           ஞானப் பூங்கோதை போற்றி பாவுக்கும் பூவுக்கும் பாதம் பெயர்த்தருளும்           பாண்டிமாதேவி போற்றி பணிவார்தம் துயரோடு பிணியாவும் பொடியாக்கும்           பரமகல் யாணி போற்றி ஏவல் கொண்டுலகு பல காவல்...

உமையவள் பாமாலை | திருமாலின் தங்கை | மாதவன், சீதரன் பாடல் (Madhavan Seetharan)

                                திருமாலின் தங்கை                               ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்                             ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் மாதவன், சீதரன் மதுசூதனன் துளசி           மாலை மார்பன் கேசவன் வைகுந்தன், அச்சுதன், மலைமேலும் அலைமேலும்           வாழ்கின்ற மறைநாயகன் தாதவிழ் மலர்க்கூந்தல் ஜானகிமணவாளன்           சனார்த்தணன் தேவதேவன் சாரங்கன், நாரணன், தாமோதரன் கோதை           தலைவன், ஆழ்வார்கள் நேசன் மேதினி அளந்ததிரி விக்(கி)ரமன், திருமகள்         விழைகின்ற பதுமநாபன் வேறு வேறான பெயர் நூறுநூ றாய்விரியும்  ...

உமையவள் பாமாலை | என்னுயிர் மிஞ்சுமோ | பொன்னும் நீநான்தேடும் பாடல் (Ponnum Nee Naan thedum)

                    என்னுயிர் மிஞ்சுமோ ?              ஓம் சக்தி  ஓம் சக்தி  ஓம் சக்தி  ஓம்            ஓம் சக்தி  ஓம் சக்தி  ஓம் சக்தி  ஓம் பொன்னும் நீநான்தேடும் பொருளும் நீ புகழும் நீ           போகங்கள் யாவும் நீயே புறமும் நீ அகமும் நீ புவியெங்கும் நான் காணும்           பொலிவு நீ போதம் நீயே முன்னும் நீ நடுவும் நீ முடிவும் நீ முடிவுலா           முழுமை நீ ஞானம் நீயே முதுமை நீ இளமை நீ மோகம் நீ தாகம் நீ           மோனம் நீ கானம் நீயே மன்னும்நீ தான் எனது வாழ்வென்று வளம் என்று           மனமுருகி நின்றதெல்லாம் வஞ்சமோ? எனதுயர் கொஞ்சமோ? இவ்வாறு           மறப்பதுவும் ஒரு நெஞ்சமோ இன்னும் நீ சற்றும் இரங்காதிருந்திடில்         ...

உமையவள் பாமாலை | எண்ணரிய கோலங்கள் | சீரார் பெருந்துறையில் பாடல் (Seerar Perunthuraiyil)

                      எண்ணரிய கோலங்கள்                                ஓம் சக்தி  ஓம் சக்தி  ஓம் சக்தி  ஓம்                                 ஓம் சக்தி  ஓம் சக்தி  ஓம் சக்தி  ஓம்                சீரார் பெருந்துறையில் சிவயோக நாயகி ;                     சிவகாமி தில்லைமன்றில் ;                தென்குமரி பகவதி திருவானைக் காவினில்                     திகழும் அகிலாண்டேஸ்வரி;                காரார் மதிற்கச்சி காமாட்சி, அங்கயற்           ...