உமையவள் பாமாலை | கண்தந்து காக்கும் கலைமகள் | பணிதங்கு நிலவுபோல் பாடல் (Panithangu Nilavupol)
கண்தந்து காக்கும் கலைமகள்
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
பணிதங்கு நிலவுபோல் பால்போல் பளிங்குபோல்
பட்டொளி நிறைந்த வடிவும்,
படிகமணி மாலையும் ஏடும் திரித்து யாழ்
பயின்றருளும் நான்குகரலும்,
புனிதங்கள் யாவும் பொருந்தவெண் தாமரைப்
பூமேல் விளங்குபதமும்,
பொழுதெலாம் எண்ணும் என் பழுதெலாம் போக்கிநற்
புலமைத்தாரா வேண்டும் அம்மா !
கனிதந்து, மலர்தந்து, கவிதந்து தொழுவோர்க்குக்
கண்தந்து காக்கும் அரசே !
கலைஞான மகளென்ற நிலையான புகழ்கொண்ட
கருணைமய மானபொருளே !
இனிதங்கு தடையின்றி யான்பாட நீகேட்க
இதயம் கனிந்தருளுவாய் !
இறைவி,எனை ஆண்டருளும் இராஜரா ஜேச்வரி,
இமயமலை வாழும்உமையே !
---------********--------
1. காப்பு
2. திருமேனி வண்ணம்
2. திருமேனி வண்ணம்
11. ஆத்ம சமர்ப்பணம்
14. ஸ்ரீ சக்ர நாயகி
15. அடிமுடி வருணனை
17. வாழ்த்து
18. வரம்
Comments
Post a Comment