Umaiyaval Pamalai | உமையவள் பாமாலை | வாழ்த்து (Valthu)

                                வாழ்த்து 

பொலிகஇவ் வையகம் பொலிக நெடு வானகம்
        போயொழிக துயரமெல்லாம்
புதியசொல் புதியபொருள் புதிய சுவை புதியஇசை
        புலரட்டும் உலகமெல்லாம்

மலிகவளம் வளர்கநலம் வாழ்கவே நல்லறம்
        மயக்கங்கள் யாவும்தீர்க!
மங்கல மடைந்தையர் மனையறம் நனிதழைக
        மடமைகள் வீழ்க! வீழ்க!!

கலிகெடுக எங்கெங்கும் கருணை அரசோச்சுக
        கயமைகள் நிலம்பு தைக!
கலைமகள் விளக்கமாய் திருமகள் பெருக்கமாய்க்
        காலங்கள் அமுதாகுக

இலம்பா(டு) ஒன்றில்லாமல் யாவர்க்கும் யாவும்இனி
        எய்தநீ ஆணைதருக
இறைவிஎனை ஆண்டரும் இராஜராஜேஸ்வரி
        இமயமலை வாழும் உமையே.

                                --------************--------

 1. காப்பு 
 2. திருமேனி வண்ணம் 

Comments

Popular posts from this blog

உமையவள் பாமாலை | நீ தந்த குங்குமம் | நெற்றியில் நீ தந்த பாடல் (Nettriyil Nee Thantha)

Umaiyaval Pamalai | உமையவள் பாமாலை | வரம் (Varam)

Umaiyaval Pamalai | உமையவள் பாமாலை | Kappu (காப்பு)