உமையவள் பாமாலை | உணர்வரிய பிரமம் | மாரியாய் மேரியாய் பாடல் (Maariyaai Meriyaai)

                   உணர்வரிய பிரமம் 

                ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
                ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்

மாரியாய் மேரியாய் முகமது நபிக்கருள
        வந்த ஒரு மாசக்தியாய்
மனவாக் கிறந்ததிருவருளாய் மதங்கள் தோறும்
        வாழ்கின்ற தெய்வம் நீயே

ஓரிடம் ஒருகுணம் ஒருநிலை ஒருருவம்
        ஒருபெயர் ஒருவிகற்பம்
ஒன்றுமில்லாத படி ஒவ்வொன்றும் தானாகி
        உணர்வரிய பிரமம் நீயே

ஆரியம் திராவிடம் ஆங்கிலம் சீனமென
        அமைகின்ற மொழிகள் நீயே
ஆமென்றும் இல்லையென அறுதியுடன் வாதித்தும்
        அடைவரிய எல்லை நீயே

யாரென்ன சொன்னாலும் யான் உன்னை ஒரு நாளும்
        ஐயுற்ற தில்லை தாயே
இறைவிஎனை ஆண்டருளும் இராஜராஜேஸ்வரி
        இமயமலை வாழும் உமையே

                        -----------************-----------

 1. காப்பு 
 2. திருமேனி வண்ணம் 


Comments

Popular posts from this blog

உமையவள் பாமாலை | நீ தந்த குங்குமம் | நெற்றியில் நீ தந்த பாடல் (Nettriyil Nee Thantha)

Umaiyaval Pamalai | உமையவள் பாமாலை | வரம் (Varam)

Umaiyaval Pamalai | உமையவள் பாமாலை | Kappu (காப்பு)