உமையவள் பாமாலை | தவம் செய்யும் மலர் | என்னகவி பாடினால் பாடல் (Ennakavi Padinal)

                    தவம்  செய்யும் மலர் 

            ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
            ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்

என்னகவி பாடினால் உன் மனது மாறுமோ
        என்மீதும் கருணை வருமோ
எவர்மூலம் அணுகினால் யான் செய்யும் விண்ணப்பம்
        எளிதாக நிறைவேறுமோ

சொன்னபடி கேளாமல் துயர் செய்யும் என்மனம்
        தூய்மைபெற வழியுமுண்டோ?
சோதித்து வாட்டுவது போதுமென உன்னிடம்
        சொல்லுபவர் யாருமிலையோ?

சின்னமலர் என்றாலும் தேன்துளி சுமந்து தவம்
        செய்துவரும் மலரல்லவோ?
செப்புவது பிழைபடினும் செவியின்பம் தரவல்ல
        சேய்மழலை மொழியல்லவோ?

இன்னபடி தான் பெற்ற பிள்ளைதுயர் எய்துகையில்
        இளகாத தாயுமுண்டோ?
இறைவிஎனை ஆண்டருளும் இராஜராஜேஸ்வரி
        இமயமலை வாழும் உமையே

                                           --------********---------

 1. காப்பு 
 2. திருமேனி வண்ணம் 

Comments

Popular posts from this blog

உமையவள் பாமாலை | நீ தந்த குங்குமம் | நெற்றியில் நீ தந்த பாடல் (Nettriyil Nee Thantha)

Umaiyaval Pamalai | உமையவள் பாமாலை | வரம் (Varam)

Umaiyaval Pamalai | உமையவள் பாமாலை | Kappu (காப்பு)