உமையவள் பாமாலை | அடிமுடி வருணனை | நோக்கும் திசைதோறும் பாடல் (Nookum Thesaithoorum)
அடிமுடி வருணனை
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
நோக்கும் திசைதோறும் நூபுரத் தாள்களும்,
நூல்போல் ஒசிந்த இடையும்,
நொடிதோறும் நொடிதோறும் புதிதான எழில்கொள்ளும்
நுவலரிய திருமேனியும்,
வார்க்குங் குமக்கச்சு மார்பும்,அம் மார்பினில்
வாடாத மலர்மாலையும்,
வயிரமொடு நவமணி வயங்குமங் கலநாணும்,
மணம்வீசும் இனியபொலிவும்,
காக்கும் கரங்களும், அங்குசம் பாசம்
கரும்புவில் மலர்கள்ஐந்தும்,
கனிவாயில் மூரலும், கருணைபொழி விழிகளும்,
கனமணி ஒளிறுமுடியும்,
ஈர்க்கும் சுடர்முகமும் இருவிழி கலிப்பயாம்
எங்கெங்கும் காண அருள்வாய் !
இறைவி,எனை ஆண்டருளும் இராஜரா ஜேச்வரி,
இமயமலை வாழும் உமையே !
--------*******------
1. காப்பு
2. திருமேனி வண்ணம்
2. திருமேனி வண்ணம்
11. ஆத்ம சமர்ப்பணம்
14. ஸ்ரீ சக்ர நாயகி
15. அடிமுடி வருணனை
17. வாழ்த்து
18. வரம்
Comments
Post a Comment