உமையவள் பாமாலை | திருமாலின் தங்கை | மாதவன், சீதரன் பாடல் (Madhavan Seetharan)

                         திருமாலின் தங்கை

                        ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
                        ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்


மாதவன், சீதரன் மதுசூதனன் துளசி
        மாலை மார்பன் கேசவன்
வைகுந்தன், அச்சுதன், மலைமேலும் அலைமேலும்
        வாழ்கின்ற மறைநாயகன்

தாதவிழ் மலர்க்கூந்தல் ஜானகிமணவாளன்
        சனார்த்தணன் தேவதேவன்
சாரங்கன், நாரணன், தாமோதரன் கோதை
        தலைவன், ஆழ்வார்கள் நேசன்

மேதினி அளந்ததிரி விக்(கி)ரமன், திருமகள்
       விழைகின்ற பதுமநாபன்
வேறு வேறான பெயர் நூறுநூ றாய்விரியும்
        மேகவண்ணன் தங்கையே!

ஈதென வரைந்து யாம் ஓதுதற் கரியநின்
        இசைபாட மொழியேது காண்
இறைவினைஎனை ஆண்டருளும் இராஜராஜேஸ்வரி
     இமயமலை வாழும் உமையே

                                --------********-------

 1. காப்பு 
 2. திருமேனி வண்ணம் 

Comments

Popular posts from this blog

உமையவள் பாமாலை | நீ தந்த குங்குமம் | நெற்றியில் நீ தந்த பாடல் (Nettriyil Nee Thantha)

Umaiyaval Pamalai | உமையவள் பாமாலை | வரம் (Varam)

Umaiyaval Pamalai | உமையவள் பாமாலை | Kappu (காப்பு)