உமையவள் பாமாலை | என்னுயிர் மிஞ்சுமோ | பொன்னும் நீநான்தேடும் பாடல் (Ponnum Nee Naan thedum)

                என்னுயிர் மிஞ்சுமோ ?


          ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
          ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்

பொன்னும் நீநான்தேடும் பொருளும் நீ புகழும் நீ
        போகங்கள் யாவும் நீயே
புறமும் நீ அகமும் நீ புவியெங்கும் நான் காணும்
        பொலிவு நீ போதம் நீயே

முன்னும் நீ நடுவும் நீ முடிவும் நீ முடிவுலா
        முழுமை நீ ஞானம் நீயே
முதுமை நீ இளமை நீ மோகம் நீ தாகம் நீ
        மோனம் நீ கானம் நீயே

மன்னும்நீ தான் எனது வாழ்வென்று வளம் என்று
        மனமுருகி நின்றதெல்லாம்
வஞ்சமோ? எனதுயர் கொஞ்சமோ? இவ்வாறு
        மறப்பதுவும் ஒரு நெஞ்சமோ

இன்னும் நீ சற்றும் இரங்காதிருந்திடில்
        என்னுயிர் இனி மிஞ்சுமோ?
இறைவிஎனை ஆண்டருளும் இராஜராஜேஸ்வரி
        இமயலை வாழும் உமையே

                                         ---------*********---------

 1. காப்பு 
 2. திருமேனி வண்ணம் 

Comments

Popular posts from this blog

உமையவள் பாமாலை | நீ தந்த குங்குமம் | நெற்றியில் நீ தந்த பாடல் (Nettriyil Nee Thantha)

Umaiyaval Pamalai | உமையவள் பாமாலை | வரம் (Varam)

Umaiyaval Pamalai | உமையவள் பாமாலை | Kappu (காப்பு)