உமையவள் பாமாலை | நானில்லையா தேனில்லையா | துயிலெலும் வேளையில் பாடல் (Thuyilelum Velaiyil)
நானில்லையா ? தேனில்லையா ?
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
துயிலெலும் வேளையில் சுவைநீர் அருந்துகையில்
துறைநீர் படிந்தெழுகையில்
தொழுகையில் பலபணியும் புரிகையில் இன்பமொடு
துன்பங்கள் எதிர்வருகையில்
துறைநீர் படிந்தெழுகையில்
தொழுகையில் பலபணியும் புரிகையில் இன்பமொடு
துன்பங்கள் எதிர்வருகையில்
வயிராற உண்ணுகையில் மாதரார் தோட்புறம்
மனமுருகி உயிர்தோய் கையில்
மக்கள் மெய் தீண்டுகையில் மாறாத காதலொடு
வண்டமிழ்ச் சுவை ஆய்கையில்
அயலெவரும் அறியாமல் அன்னையுனை வழிபடும்
ஆசைமகன் நானில்லையா
ஆசைமகன் தருகின்ற வாசமலர் மாலைகள்
அத்தனையும் தேனில்லையா?
இயலும்வரை பாடியும் எடுத்தளிக்காமல் நீ
இருப்பதொரு பழியில்லையா?
இறைவிஎனை ஆண்டருளும் இராஜராஜேஸ்வரி
இமயமலை வாழும் உமையே
இருப்பதொரு பழியில்லையா?
இறைவிஎனை ஆண்டருளும் இராஜராஜேஸ்வரி
இமயமலை வாழும் உமையே
--------------******--------------
1. காப்பு
2. திருமேனி வண்ணம்
2. திருமேனி வண்ணம்
11. ஆத்ம சமர்ப்பணம்
14. ஸ்ரீ சக்ர நாயகி
15. அடிமுடி வருணனை
17. வாழ்த்து
18. வரம்
Comments
Post a Comment