உமையவள் பாமாலை | ஆத்ம சமர்ப்பணம் | காற்றைப் படைத்தவள் பாடல் (Kattrai Padaithaval)

                    ஆத்ம சமர்ப்பணம் 

காற்றைப் படைத்தவள் நீயென்ற போதிலும்
        கவரிகள் வீசுகின்றோம்
கனலும்உன் வடிவெனிலும் கற்பூர தீபங்கள்
        கமழ்தூபம் காட்டுகின்றோம்

ஆற்றையும் கடலையும் அருளியநின் மேனிக்கும்
        அபிடேக நீர்சு மந்தோம்
அங்கிங் கெனாதுவெளி எங்குமுள நீ உறைய
        ஆங்காங்கு கோயில் செய்தோம்

போற்றரிய நின்வடிவைப் பொன்னிலும் கல்லிலும்
        பூசித்து வாழ்த்துகின்றோம்
புவிமீது நீ தந்த பொருளன்றி வேறொன்றைப்
        போய்தேடி எங்கு பெறுவோம்

ஏற்றருள வேண்டும் என இதயத்தை எம் அன்பை
    இணைமலர்த் தாளில் வைத்தோம்
இறைவிஎனை ஆண்டருளும் இராஜராஜேஸ்வரி
    இமயமலை வாழும் உமையே 

                                ---------********---------

 1. காப்பு 
 2. திருமேனி வண்ணம் 

Comments

Popular posts from this blog

உமையவள் பாமாலை | நீ தந்த குங்குமம் | நெற்றியில் நீ தந்த பாடல் (Nettriyil Nee Thantha)

Umaiyaval Pamalai | உமையவள் பாமாலை | வரம் (Varam)

Umaiyaval Pamalai | உமையவள் பாமாலை | Kappu (காப்பு)