உமையவள் பாமாலை | ஆதரிப்பாய் அம்மா | ஆயிரம் இதழ்கொண்ட பாடல் (Aayiram Ethalkonda)
ஆதரிப்பாய் அம்மா
ஆயிரம் இதழ்கொண்ட தாமரை மலரிலே
அழகாக வீற்றிருப்பாய்
அங்குசம் பாசம் கரும்பு வில் ஐங்கனை
அங்கையில் ஏற்றிருப்பாய்
அழகாக வீற்றிருப்பாய்
அங்குசம் பாசம் கரும்பு வில் ஐங்கனை
அங்கையில் ஏற்றிருப்பாய்
வேயின் குழல் முழவு வீணைநாத ஸ்வரம்
மேவுமிசை கேட்டிருப்பாய்
விறலியர் நடம்புரிய வேறு வேறான கலை
விந்தைகள் நயந்திருப்பாய்
மேவுமிசை கேட்டிருப்பாய்
விறலியர் நடம்புரிய வேறு வேறான கலை
விந்தைகள் நயந்திருப்பாய்
ஞாயிறு முதற் பிரமன் நாராயணன் துதித்திடவும்
ஞாலமுழு தாண்டி ருப்பாய்
நாடிவரும் அன்பர்க்குக் கோடிநலம் தந்துலகில்
நலிவின்றிக் காத்திருப்பாய்
ஞாலமுழு தாண்டி ருப்பாய்
நாடிவரும் அன்பர்க்குக் கோடிநலம் தந்துலகில்
நலிவின்றிக் காத்திருப்பாய்
ஈயென இரந்துன்னை வேண்டவும் வேண்டுமோ
எனையும் நீ ஆதரிப்பாய்
இறைவிஎனை ஆண்டருளும் இராஜராஜேஸ்வரி
இமயமலை வாழும் உமையே
எனையும் நீ ஆதரிப்பாய்
இறைவிஎனை ஆண்டருளும் இராஜராஜேஸ்வரி
இமயமலை வாழும் உமையே
--------*********--------
1. காப்பு
2. திருமேனி வண்ணம்
2. திருமேனி வண்ணம்
11. ஆத்ம சமர்ப்பணம்
14. ஸ்ரீ சக்ர நாயகி
15. அடிமுடி வருணனை
17. வாழ்த்து
18. வரம்
Comments
Post a Comment