உமையவள் பாமாலை | எண்ணரிய கோலங்கள் | சீரார் பெருந்துறையில் பாடல் (Seerar Perunthuraiyil)
எண்ணரிய கோலங்கள்
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
சீரார் பெருந்துறையில் சிவயோக நாயகி ;
சிவகாமி தில்லைமன்றில் ;
தென்குமரி பகவதி திருவானைக் காவினில்
திகழும் அகிலாண்டேஸ்வரி;
சிவகாமி தில்லைமன்றில் ;
தென்குமரி பகவதி திருவானைக் காவினில்
திகழும் அகிலாண்டேஸ்வரி;
காரார் மதிற்கச்சி காமாட்சி, அங்கயற்
கண்ணி செந்தமிழ் மதுரையில்
கங்கைவள நாடுடைய நங்கை விசாலாட்சி
காளிவங் காள மண்ணில்
தாரார்சிவன் தோளும் தமிழும் விழைபவள்
சமயபுரம் அதனில் மாரி
தட்டாமல் கடவூரில் பட்டருக்கருள் செய்த
தையல் அபிராமவல்லி
ஏரார் மழைக்கண்ணி எண்ணரிய நின்கோலம்
யாவும் எமை ஆள வலவோ
இறைவிஎனை ஆண்டருளும் இராஜராஜேஸ்வரி
இமயமலை வாழும் உமையே
-------*******-------
1. காப்பு
2. திருமேனி வண்ணம்
2. திருமேனி வண்ணம்
11. ஆத்ம சமர்ப்பணம்
14. ஸ்ரீ சக்ர நாயகி
15. அடிமுடி வருணனை
17. வாழ்த்து
18. வரம்
Comments
Post a Comment