உமையவள் பாமாலை | திருமேனி வண்ணம் | சிந்தூரம் குங்குமம் பாடல் (Senthoorum Kunguman)
திருமேனி வண்ணம்
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
சிந்தூரம், குங்குமம், செவ்வானம், அவ்வானம்
திகழவரு கதிரின்உதயம்,
தேசுமிகு மாணிக்கம், திருஏறு கமலம்,அச்
செங்கமலம் அஞ்சுபவழம்,
திகழவரு கதிரின்உதயம்,
தேசுமிகு மாணிக்கம், திருஏறு கமலம்,அச்
செங்கமலம் அஞ்சுபவழம்,
மந்தாரம், மழைநாளில் வரும்இந்த்ர கோபம்,அவ்
வண்டூரும் மலையில்நறவம்,
மான்மதம், செங்குருதி போல்மலரும் மாதுளம்
மாதுளம் சிதறுமுத்தம்,
செந்தீயின் வண்ணம்என வேசொல்லும் மேனியும்,
செப்பரிய அழகுவடியவும்,
சிங்க தனத்திலும் சிவனார் மனத்திலும்
சீர்கொண்டி லங்கும்எனினும்
எந்தாய்நின் பேர்சொல்லும் ஏழையேன் அறிவிலும்
என்றென்றும் திகழஅருள்வாய் !
இறைவி,எனை ஆண்டருளும் இராஜரா ஜேச்வரி,
இமயமலை வாழும்உமையே !
------*********-------
1. காப்பு
2. திருமேனி வண்ணம்
2. திருமேனி வண்ணம்
11. ஆத்ம சமர்ப்பணம்
14. ஸ்ரீ சக்ர நாயகி
15. அடிமுடி வருணனை
17. வாழ்த்து
18. வரம்
Comments
Post a Comment