Umaiyaval Pamalai | உமையவள் பாமாலை | Kappu (காப்பு)
தத்துவ விநாயகர்
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
காப்பு
அண்டங்கள் ஏழினோ டேழும், அப் பாலுமாய்
ஆனஎம் ஞானதேவா !
அறுகுடன் தும்பையும், ஆத்தியும் , கொன்றையும்,
அணிசெய்யும் அழகுமார்பா !
ஆனஎம் ஞானதேவா !
அறுகுடன் தும்பையும், ஆத்தியும் , கொன்றையும்,
அணிசெய்யும் அழகுமார்பா !
எண்டிசை நடுங்கவே இறைவனார் தேரின்அச்(சு)
இற்றிடச் செய்தவீரா !
இலகுபுகழ் முனிசொல்ல உலகுபுகழ் பாரதம்
எழுதிடும் கவிதைநேசா !
இலகுபுகழ் முனிசொல்ல உலகுபுகழ் பாரதம்
எழுதிடும் கவிதைநேசா !
தண்டையொடு கிண்கிணி சதங்கையும் கொஞ்சவே
சந்தநடை கொள்ளும்பாதா !
சரவணன் அறுமுகன் மணமகன் ஆகவே
தண்ணளி புரிந்தஈசா !
சந்தநடை கொள்ளும்பாதா !
சரவணன் அறுமுகன் மணமகன் ஆகவே
தண்ணளி புரிந்தஈசா !
தெண்டிரை சூழுலகில் தேவிரா ஜேஸ்வரியின்
தெய்வமாக் கருணைபாடச்
சித்தமிசை குடிகொண்ட தத்துவ விநாயகா
திருவருள் தத்துநீகா !
தெய்வமாக் கருணைபாடச்
சித்தமிசை குடிகொண்ட தத்துவ விநாயகா
திருவருள் தத்துநீகா !
நூல்
1. காப்பு
2. திருமேனி வண்ணம்
2. திருமேனி வண்ணம்
11. ஆத்ம சமர்ப்பணம்
14. ஸ்ரீ சக்ர நாயகி
15. அடிமுடி வருணனை
17. வாழ்த்து
18. வரம்
Comments
Post a Comment