உமையவள் பாமாலை | அருளை வேண்டினேன் | தேறாத கவியெனிலும் பாடல் (Thaeratha Kavienilum)

                    அருளை வேண்டினேன் 

                        ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
                        ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்

தேறாத கவியெனிலும் மாறாத காதலால்
    திருமுன்பு சாற்றுகின்றேன் !
சிந்தைஅணு  ஒவ்வொன்றும் தேவிஉன  தேகச் 
    செய்யதமிழ் பாடுகின்றேன் 

ஆறாத துயருக்கும் அகலாத கவலைக்கும் 
    ஆரைநான் நொந்துகொள்வேன் ?
அறியாது பிழைசெய்து சரியாக வதைபட்ட 
    அவலத்தை எங்குசொல்வேன் ?

நீறாக வேநிருதர் புரமூன்றும் செற்றஉனை 
    நெஞ்சாரப் போற்றுகின்றேன் !
நெற்றிவிழி யால்எனது குற்றமலை பொடியாக 
    நின்னருளை வேண்டுகின்றேன் !

ஈறேதும் இல்லாத இன்பவடி வாக,என் 
    இதயதள மீதும்ஒளிர்வாய் !
இறைவி,எனை ஆண்டருளும் இராஜரா ஜேச்வரி,
    இமயமலை  வாழும்உமையே ! 

                                -------*******-------


 1. காப்பு 
 2. திருமேனி வண்ணம் 

Comments

Popular posts from this blog

உமையவள் பாமாலை | நீ தந்த குங்குமம் | நெற்றியில் நீ தந்த பாடல் (Nettriyil Nee Thantha)

Umaiyaval Pamalai | உமையவள் பாமாலை | வரம் (Varam)

Umaiyaval Pamalai | உமையவள் பாமாலை | Kappu (காப்பு)